லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் அதே பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று பொலிஸ் நிலையத்தின் உதவி சேவையில் பொறுப்பாக இருந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த, இந்த சம்பவம் தொடர்பில் இரகசியப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.