இன்று அதிகாலை தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்பு வழிய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடும் மழை காரணமாக லக்ஸபான நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.