லக்‌ஷான் மற்றும் ஹஸரங்காவின் முயற்சியில் இலங்கை அணி வெற்றி கொண்டது..

காலியில் இடம்பெற்ற சிம்பாபேயிற்கு எதிரான 2 ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி நேற்று(02) ஏழு விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி 33.4 ஓவர்களுக்கு மட்டுமே முகம்கொடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக அபாரமாக பந்து வீசிய லக்‌ஷான் சன்டகன் நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். வனிது ஹஸரங்கா மூன்று விக்கெட்டுக்களை ஹெட்ரிக் முறையில் வரிசையாக வீழ்த்தினார்.

இதனையடுத்து, 156 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி 30.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து, 158 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை எட்டியது.

இதன்படி, இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் நேற்றைய போட்டியை வெற்றி கொண்டது. ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1:1 என சமநிலையில் உள்ளது.

 

(rizmira)