லங்கா இ நியுஸ் செய்தி ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவை கைது செய்யுமாறு கம்பஹா பிரதான நீதவான் இன்று(25) உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டிற்காகவே இவருக்கு இவ்வாறு இன்டர்போல் பிடிவிறாந்து விடுக்கப்பட்டுள்ளது.
ரிவிர பத்திரிகை ஆசிரியர் உபாலி தென்னகோன் தாக்கப்பட்டமை குறித்த வழக்கின் சந்தேக நபரான பிரேம் ஆனந்த உதலாகம எனும் நபரின் புகைப்படத்தினை பிரசுரித்து, நீதிமன்றினை அவமதித்ததாக நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.