லசந்தவின் அடக்கஸ்தலத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு.

‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லசந்த விக்ரமதுங்கவின் உடலினை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு ஜனவரி மாதம் அத்திட்டிய பிரதேசத்தில் வைத்து லசந்த விக்ரமதுங்க மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி படுகொலை செய்திருந்தனர்.

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் பூதவுடல் 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதி பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தற்போது விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

லசந்த கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவரது பூதவுடல் மீளவும் தோண்டி எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகவே பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.