லசந்தவின் சடலத்தினை தோண்டும் போது படம்பிடித்த ஆளில்லா கெமராவால் பரபரப்பு..

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், ஐந்தரை வருடங்களின் பின்னர், இன்று(27) பொரல்லை, கனத்த மயானத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தோண்டியெடுக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

குறித்த வளவுக்குள் ஊடகவியலாளர்கள் எவரையும் உட்பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பும் இடப்பட்டுள்ளது.

லசந்தவின் சடலத்தினை தோண்டும் பணியின் போது ஆளில்லா கெமரா (Drone Camera) ஒன்று சடலத்திற்கு மேலாக படம்பிடித்துச் சென்றுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த மேலதிகள் விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.