லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பவம் – பிரசன்ன மற்றும் திஸ்ஸ ஆகியோருக்கு பிணை…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகதபால ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பவம் தொடர்பில் குறித்த இருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.