லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு – பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியில் நீடிப்பு…

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் கைதான இரு பொலிஸ் அதிகாரிகளும், எதிர்வரும் 15 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் நேற்று(02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசந்த நாணயக்கார மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸசிறி சுகதபால ஆகியோரே மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.