விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசெகர குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஊடக முன்னிலையில் வெளியிட்ட லசித் மாலிங்கவுக்கு ஒரு ஆண்டு தடையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு துறை அமைச்சர் ஜெயசேகர இலங்கை அணி வீரர்கள் சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் போது மிகவும் குண்டாக இருந்ததாக விமர்சனம் செய்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மாலிங்க, குரங்குடன் அமைச்சரை ஒப்பிட்டு பேச அது சர்ச்சையாக வெடித்தது.
இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரிய குழு மாலிங்கவிடம் ஒழுக்காற்று விசாரணையை நேற்று(27) மேற்கொண்டது.
தனது செயலுக்கு மாலிங்க மன்னிப்பு கேட்டுள்ள நிலையில், மாலிங்கவுக்கு ஒரு ஆண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்து இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், ஆறு மாதம் இடைநீக்கமும், ஒரு போட்டியில் 50% ஊதியம் அபராதமும் விதித்துள்ளது.
This is not the time to punish Malinga. Personal revenge taking will lead the Srilankan team to the lowest level further. Malinga tried hard against Pakistan team. Most of the catches dropped by other players. Cricket well-wishers should work hard to abolish the punishment of Malinga. Because Malinga is a key bowler and good game changer. Otherwise he will be utilized by overseas teams for their benefits. Srilankans please concern about this issue.