லசித் மாலிங்க ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போகிறாராம்..?

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க எதிர்வரும் காலங்களில் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாட தீர்மானித்துள்ளதாக மாலிங்கவின் நம்பிக்கைக்குரிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லசித் மாலிங்கவிற்கு காலில் ஏற்பட்டுள்ள உபாதையே மேற்குறித்த தீர்மானத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், எதிர்வரும் ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 போட்டிகளில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மாலிங்கவின் உபாதையானது தற்போது ஓரளவு நலம் பெற்று வருவதுடன் அவர் பயிற்சிகளுக்கும் முகம் கொடுப்பதாக மேலும் தெரியவருகிறது.

கிரிக்கெட் நிறுவனமானது மாலிங்கவிடம் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்குமாறு கோரிக்கை விடுத்தும் மாலிங்க குறித்த கோரிக்கைக்கு எவ்வித பதிலையும் வழங்கவில்லை எனவும் தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிகின்றன.