லசித் மாலிங்க குறித்து ஷிகார் தவான் விசேட அனுமானம்..

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவின் பந்து வீச்சின் வேகம் குறைந்துள்ளதாகவும் அதற்குக் காரணம் அவரின் வயது எனவும் தற்போது மாலிங்கவிற்கு வயதாகி விட்டதாகவும் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகார் தவான் ஊடக முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

“மாலிங்க இலங்கை கிரிக்கெட்டின் திறமையான வீரர். அவர் கிரிக்கெட்டின் மூலம் நாட்டிற்கு பாரிய சேவை ஒன்றினை ஆற்றியுள்ளார். என்றாலும் தற்போது அவர் கொஞ்சம் அவரது நிலையிலிருந்து இறங்கியுள்ளார். ஆதலால் அவரது வேகமும் குறைந்துள்ளது. ஆதலால் எமக்கு துடுப்பாட்ட முறையில் அவரை இலகுவில் எதிர்க்க முடியும். அது தான் உண்மை. அது ஒரு வாழ்க்கை சக்கரம். இலங்கை ஒரு இளம் அணி. இளம் வீரர்கள் திறமையானவர்கள், அவர்களுக்கு காலம் தான் இடம் கொடுக்க வேண்டும்.”

தற்போது 33 வயதினைக் கடந்துள்ள லசித் மாலிங்க இந்திய அணிக்கு எதிராக பங்கேற்றது அவரது 200 ஆவது சர்வதேச ஒரு நாள் போட்டியாகும்.

 

(rizmira)