(FASTNEWS|COLOMBO) – வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஏர் இந்தியா விமானம் லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மும்பையில் இருந்து அமெரிக்காவின் நெவார்க் நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், திடீரென விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த விமானம் லண்டன் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.