லண்டனில் கைது செய்யப்பட்ட 04 இலங்கையர்களும் விடுதலை…

(FASTNEWS|COLOMBO) கடந்த வாரம் லண்டன் – லுடன் விமான நிலையத்தில் வைத்து ​அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் நால்வரும் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றில் அங்கத்துவம் பெற்றுள்ள சந்தேகத்தில் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.