லலித் – அனுஷ ஆகிய இருவரும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி..

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பௌத்த பிக்குகளுக்கான சீல் சீருடை விநியோகத்தில் அரசாங்க நிதியை முறைக்கேடாக கையாண்டமை குறித்த வழக்கில் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புகள் ஓழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியரின் பரிந்துரைக்கு அமைய குறித்த இருவரும் நீரிழிவு நோய் நிலைமையினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் காற்சட்டை நேற்றைய தினம்(07) வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அவர்களது உறவினர்களால் கொண்டு செல்ல திருப்பி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)