(FASTNEWS| COLOMBO) – பாதாள உலக குழு உறுப்பினர் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முன்னாள் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் லலித் குமாரவை தொடர்ந்தும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் இன்று(10)உத்தரவு பிறப்பித்துள்ளது.
களுத்துறை – எத்தனமடல பகுதியில் சிறைச்சாலைகள் பேரூந்தின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு சமயங் உள்ளிட்ட 07 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தகவல் வழங்கியதாக சந்தேகத்துக்குரியவரான லலித் குமாரவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.