லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு பிணை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தலா ஒரு லட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலுமே குறித்த இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

600 மில்லியன் ரூபா பெறுமதியான சீல் துணிகளை விநியோகித்த சம்பவம் தொடர்பில் காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இன்னும், மாதம் ஒரு முறை நிதி மோசடி பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ள கொழும்பு மேல் நீதிமன்றம், வெளிநாடு செல்லவும் தடைவிதித்துள்ளது.

மேலும் சாட்சியாளர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தால், பிணை இரத்துச் செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் எனவும் பிணை வழங்கி உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுசலா சரோஜினி எச்சரித்துள்ளார்.