லஸ்ஸி குடிச்சா இவ்ளோ நன்மைகளா?

உணவில் சேர்த்துக் கொள்ளும் பால், தயிர்,மோர் போன்றவற்றினால் மட்டுமல்ல தயிரின் மூலம் தயாரிக்கப்படும் லஸ்ஸியை குடிப்பதாலும் உடலுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.

இதைத் தவிர லஸ்ஸி பல மருத்துவ பயன்களையும் தருகிறது. தயிருடன் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். சிலர் இதில் தேன், ஏலக்காய் உட்பட பல பொருட்களை மிக்ஸ் செய்தும் குடிக்கிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி :
பால் பொருட்கள் உடலுக்கு நன்மைசெய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கக்கூடிய புரோபயாட்டிக்ஸ் (Probiotics) நிறைந்த உணவுகள். இவை, வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதுடன், நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கவும் உதவும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

செரிமானம் :
லஸ்ஸியில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்துக்கு தேவையான என்சைம்களை அதிகரித்து, செரிமானத்துக்கு உதவும். உடலின் ஜீரண சக்தியை பலப்படுத்தும்.

வயிற்றுக் கோளாறுகள்:
மலச்சிக்கல், வயிற்றுப் புண், வயிறு உப்புசம் உள்ளிட்ட வயிற்று உபாதைகளைச் சரியாக்கும்.

எலும்புகளை வலுவாக்கும் :
லஸ்ஸியில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது நம் எலும்புகளும் பற்களும் வலிமையாக உதவுகிறது. மேலும், எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

உடனடி சக்தி :
விட்டமின் பி 12 இரத்தத்தில் உள்ள குளூக்கோஸை ஆற்றலாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் விட்டமின் பி 12 இருப்பதால், ஒரு டம்ளர் லஸ்ஸி குடித்தால் உடனடி ஆற்றல் கிடைக்கும். தொடர்ச்சியாக, லஸ்ஸி சாப்பிட்டு வந்தால், விட்டமின் பி 12 குறைபாட்டு நோய் நீங்கும்

தசைகளை வலிமையாக்கும் :
லஸ்ஸியில் புரோட்டீன் நிறைவாக உள்ளது. இது தசைகளை வலிமையாக்கும். உடற்பயிற்சி செய்கிறவர்கள், பாடி பில்டர் போன்றவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவு. கோடைகாலத்தில் வெப்பத்தால் ஏற்படும் வியர்குரு, இரைப்பை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.