லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவன தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு..

குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்றுமுன்தினம்(09) மாலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லிட்ரோ சமையல் எரிவாயு (Litro Gas) நிறுவனத் தலைவர் சாலீய முனசிங்கவுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(11) உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாய்வான் வங்கியிலிருந்து 1.1 மில்லியன் டொலர் பணம் காணாமல் போனமை தொடர்பாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத் தலைவர் என்.எம்.எஸ் முணசிங்கவை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருந்த நிலையில் அவரை இன்று(11) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)