2017 ஆம் ஆண்டு ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் அசோக சேபால உட்பட 4 பேர் நேற்றிரவு(03) கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று(04) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.