லிந்துலை – எல்ஜீன் பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 26 குடும்பங்களைச் சேர்ந்த 94 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக 26 வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஹற்றன் – செனன் செம்புவத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தடைப்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியுடனான போக்குவரத்து இதுவரையில் முழுமையாக வழமைக்கு கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதியில் ஒரு வழி போக்குவரத்து மட்டுமே மேற்கொள்ப்படுவதாக பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
தமது போக்குவரத்து செயற்பாடுகளை மேலும் இலகுபடுத்திக் கொள்வதற்கு மாற்றுவழிகளை பயன்படுத்துமாறும் ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.