லிபியா அருகே அகதிகள் கப்பல் கடலில் மூழ்கி 74 அகதிகள் பலி…

லிபியாவின் மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு தப்ப முயன்ற போது மோசமான காலநிலை காரணமாக அகதிகள் கப்பல் கடலில் மூழ்கி 74 அகதிகள் பலியானார்கள்.

ஆப்பிரிக்கா நாடான லிபியாவில் நிலவும் அரசியல் நிலையற்ற சூழ்நிலையால் அந்நாட்டு மக்கள் வெளியேறி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் மூலம் சென்று அங்கு சட்டவிரோதமாக குடியேறுகின்றனர்.

இவ்வாறு படகில் செல்லும் போது அவ்வப்போது கடலில் மூழ்கி அவர்கள் பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. மேலும் பலர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். லிபியா மக்கள் அகதிகளாக செல்வதை தடுக்க அந்நாட்டு கடலோர காவல் படை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் எந்த பலனும் இல்லை.

பின்னர் அந்த படகு லிபியா நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் ஒதுங்கியது. அந்த படகுடன், 74 பேரின் உடல்களும் கரை ஒதுங்கின. இதுபற்றி தகவல் அறிந்த மீட்பு படையினரும், செஞ்சிலுவை சங்கத்தினரும் அங்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டனர்.