லிபியா நாட்டில் 12 இராணுவ அதிகாரிகளின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகளின் பிணம் சாலையில் வீசப்பட்டு கிடந்தது.
லிபியா நாட்டில் நீண்ட கால அதிபராக இருந்த முகமது கடாபி 2011ம் ஆண்டு புரட்சி படையினரால் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து அங்கு உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது.
இதை பயன்படுத்தி சில பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள சபரதா நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.
அவர்கள் இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சிலரை ஏற்கனவே சிறை பிடித்து இருந்தனர்.
இவ்வாறு தங்கள் பிடியில் இருந்த 12 இராணுவ அதிகாரிகளை தலை துண்டித்து கொலை செய்துள்ளனர் ஐஎஸ் தீவிரவாதிகள்.