லிஹினபிட்டிய கிராமத்தை யானைகளிடமிருந்து காக்க பிரதி அமைச்சர் தெவரப்பெருமயால் நடவடிக்கை…

யானையின் தாக்குதலுக்கு அடிக்கடி இலக்காகும் மாத்தளை – அஹரகடுவ, லிஹினிபிட்டிய பிரதேசத்தின் சுமார் 15Km தூரத்துக்குத் தடுப்பு வேலிகளை உடனடியாக அமைத்தல் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தை தற்காலிகமாக நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ஆம் திகதியன்று, யானையின் தாக்குதலில் பலியான இருவரது குடும்பங்களினதும் உறவினர்களைச் சந்திப்பதற்காக, நேற்று(24), லிஹினிபிட்டி கிராமத்துக்குச் சென்றிருந்த வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும, மேற்கண்டவாறு நடவடிக்கை எடுக்குமாறு, உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.