ஐக்கிய அரபு இராச்சியத்தின் லுலு சர்வதேச நிறுவனம் இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
குறித்த இந்த நிறுவனத்தின் சர்வதேச முகாமைத்துவ பணிப்பாளர் யூசுப் அலி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கையின் சமகால அரசாங்கம் கடைபிடிக்கும் முதலீட்டுக்கான பொருளாதார நடைமுறையினால் தாம் இலங்கையில் முதலீடு செய்ய விருப்பம் கொண்டதாக இதன்போது தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்றுமதிக்கு மேதிகமாக வர்த்தகம், சுற்றுலாத் தொழிற்துறை ,கல்வி மற்றும் சுகாதாரத் துறையிலும் முதலீடு செய்வதற்கு இவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.