லேக்ஹவுஸ் நிறுவனத்தின் சிங்களப் பதிப்புகளான தினமின, சிலுமின ஆகியவையின் வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், ஆங்கில பத்திரிகையான டெய்லி நியூஸ் மற்றும் வாரப் பத்திரிகையான சண்டே ஒப்சேர்வர் ஆகியவைக்கு கொழும்பினை அண்டிய சந்தையில் ஓரளவு கிராக்கி இருக்கத்தான் செய்கிறது.
இவை குறைந்த தரப்பினரின் தேவைக்கு மட்டுமின்றி அரசின் வர்த்தமானி மற்றும் டெண்டர் அறிவித்தல்களுக்கும் அதிகளவு பாவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த பத்திரிகைகளில் அரசுக்கு சார்பான செய்திகளும், அரசுக்கு எதிராக முன்வைக்கும் செய்திகளுக்கு மறுப்பு செய்திகளுமே அதிகளவு பிரசுரிக்கப்படுவதால் குறித்த நிறுவனத்தின் பத்திரிகைகள் தொடர்ந்தும் பெரிதும் வீழ்ச்சியினை எதிர் நோக்கியுள்ளது. இதன் காரணமாக கொழும்பிலுள்ள பிரபல தொடர்மாடி குடியிருப்புகளுக்கு பத்திரிகைகளை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதகாவும் தெரிவிக்கப்படுகின்றது.
அது குறித்து சில குடியிருப்பாளர்கள் “இலவசமாக கிடைக்கும் ஆங்கிலப் பத்திரிகைகளை சும்மா வாசிக்கிறோம்..” என அலட்டிக் கொண்டு குப்பைத் தொட்டிகளில் எறிவதாக குறித்த குடியிருப்பில் உள்ள ஒருவர் தெரிவித்திருந்தார்.
லேக்ஹவுஸ் நிறுவனமானது, 1926ம் ஆண்டுகளில் நிறுவப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
லேக்ஹவுஸ் பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்படுவது குறித்த பிரசுரம்…


