லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவராக அரசியல் சீர்திருத்தவாதியும் ஊடகத்துறைசார் நிபுணருமான கிரிஷாந்த குரே நியமிக்கப்பட்டுள்ளார்.
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கவன் ரத்நாயக்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக நியமிக்கபட்டதையடுத்தே.அவரது பதவிக்கு கிரிஷாந்த குரே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது உத்தியோகபூர்வ கடமைகளை இன்று(18) பொறுப்பேற்கவுள்ளார். இவர் ஹோட்டல் அபிவிருத்தியாளர் சபையின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.
பிரபலமான சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் எழுத்தாளராகவும் பல ஊடகங்களுக்கு ஆலோசகராகவும் குரே செயற்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.