“லைப் ஆப் பை” பட புகழ் விலங்கு பயிற்சியாளர் புலியை துன்புறுத்தும் வீடியோ

ஆங் லீ இயக்கி ஆஸ்கார் விருது வென்ற லைப் ஆப் பை-படத்தில் விலங்கு பயிற்சியாளராக பணியாற்றியவர் மைக்கேல் ஹெக்கென்பெர்கர்.

இவர் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உயிரியல் பூங்கா வைத்துள்ளார். அந்த உயிரியல் பூங்காவில் இருக்கும் புலி ஒன்றுக்கு உயரமான நாற்காலிகளில் வேகமாக தாவி அமர்வதற்கு பயிற்சியளிக்கும் போது அந்த புலியை கொடூரமாக துன்புறுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில் புலியை அதன் வாய் மற்றும் உடலில் சாட்டையை கொண்டு அடிக்கிறார். வலியை தாங்க முடியாத புலி தரையில் படுத்துக்கொள்கிறது. பின் அவர் சொல்லியபடி நாற்காலியில் ஏறுகிறது.

இந்த வீடியோவின் இறுதியில் தான் பேசுவது வீடியோவில் பதிவு செய்யப்படுவது தெரியாமல் “எனக்கு புலியின் முகத்தில் அடிப்பது பிடிக்கும். முக்கியமாக பாதத்தில் அடித்தால் புலி நாம் சொல்வதை கேட்கும். ஆனால், இதை விலங்கு உரிமைகள் அமைப்பை சேர்ந்தவர்கள் பார்த்தால் இந்த இடத்தையே தரைமட்டமாக்கிவிடுவார்கள்” என்று கூறுகிறார்.

 

[youtube url=”https://www.youtube.com/watch?v=pmakfM0Ply8#t=63″ width=”560″ height=”315″]

 

(riz)