லொரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் உயிரிழப்பு…

பாகிஸ்தானில் லொரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ரஹிம்-யார்-கான் மாவட்டம் ஃபடாபூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது, எதிரே வந்த லொரி மோதி இன்று விபத்துக்குள்ளானது.

இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும், 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புக் குழுவினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.