லொறிகள் வேலைநிறுத்தப் போராட்டம் – பிரேசிலில் அவசரநிலை பிரகடனம்…

லொறிகள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பிரேசில் நகரத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பிரேசில் ஜனாதிபதி மைக்கேல் டெமர் பிறப்பித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரேசில் நாட்டின் தொழில் நகரம் சாவ்பாவ்லோ. இங்கு லொறி மற்றும் வாகனங்களின் வேலைநிறுத்த போராட்டம் 5 நாட்கள் மேற்கொள்ளபடுகிரதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொறிகள் இயக்காமல் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்குகள் ஏற்றிச் செல்லப்படாததால் பொருட்களுக்கு கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே நிலைமையை சமாளிக்க சாவ்பாவ்லோ நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து வீதிகளில் நிறுத்தப்பட் டுள்ள லொறிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருவதுடன்,லொறி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.