லொஹான் ரத்வத்தேயின் மனைவி ஓட்டிய மோட்டார் வாகனம் விபத்து.

தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் போது மோட்டார் வாகனங்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ள நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொஹான் ரத்வத்தேயின் மனைவி ஓட்டிய மோட்டார் வாகனமே குறித்த விபத்தில் சிக்கியுள்ளதுடன், அதில் அவரது இரண்டு மகள்களும் பயணித்துள்ள போதிலும் அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மற்றைய வாகனத்தில் பயணித்த 50 வயது பெண் மற்றும் அவரது 2 மகள்களும் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் வகுப்பாசிரியர் ஒருவர் ஓட்டிய வாகனத்திலேயே இந்த மோட்டார் வாகனம் மோதுண்டுள்ளது.

விபத்து இடம்பெற்றவுடன் யோஷித ராஜபக்ஷ அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லொஹான் ரத்வத்தேயின் மகள் யோஷித ராஜபக்ஷவின் காதலி என்பதும் குறிப்பிடத்தக்கது.