வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி

 

உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டித் தொடரின் சுப்பர் 10 சுற்று போட்டியின் மற்றுமொரு போட்டி நேற்றைய தினம்(16) இடம்பெற்றது.

பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குறித்த இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 55 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 201 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து  146 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.