வங்காளதேசத்தில் படகு விபத்தில் 2 ரோஹிங்கியா அகதிகள் உயிரிழப்பு…

மியான்மாரிலிருந்து வங்காளதேசத்திற்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இராணுவத்தினரின் தாக்குதலால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று(08) ரோஹிங்கியா முஸ்லிம்கள் சென்ற ஒரு படகு தெற்கு வங்காளதேச பகுதியில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களை வங்காளதேசம் எல்லைப் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆற்றில் மூழ்கிய மேலும் சிலரை தேடும் பணிகளில் வங்காளதேச கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.