வங்கிக் கணக்குகளை உருவாக்க வெளிநாட்டவர்களுக்கும் வாய்ப்பு..

குறைந்தபட்ச வைப்பாக, 500,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்டு, வெளிநாட்டு நாணயக் கணக்குகளை இலங்கையில் திறப்பதற்கு அனுமதியளிக்கப்படும் சட்டமூலத்தை, அரசாங்கம் தயாரித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

“விசேட வைப்புக் கணக்கு” என்ற தலைப்பிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள குறித்த இந்தச் சட்டமூலம், வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமாக, பிரித்தானிய பவுண்ட்ஸ், சுவிஸ் ஃபிராங்க், அவுஸ்திரேலிய டொலர், சிங்கப்பூர் டொலர், கனேடிய டொலர், ஜப்பானிய யென், யூரோ ஆகிய நாணயங்களும் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த நாணயங்களும், பணப்பரிமாற்றம் செய்யப்படும் 500,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமான பெறுமதியைக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)