தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட அடுத்த சில நாட்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2008-2009 ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவே இவரை கைது செய்யவுள்ளதாக மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று முந்தினம்(10) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கின் போது, 2008-2009 ஆண்டு காலப்பகுதியில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் திருகோணமலை கன்சைட் முகாமில், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட அறிந்திருந்தார் என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்திருந்தனர்.
(rizmira)