வசந்த கரன்னாகொட இன்று(11) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை…

(FASTNEWS|COLOMBO) 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட இன்று(11) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்படவிருந்த நிலையில், கைது செய்யப்படுதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு, அண்மையில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, அவரை கைது செய்வதை தடுத்து உயர் நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.