மேல்மாகாண மற்றும் பெருநகர் அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்கவிடம் நஷ்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று(04) வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
நிலக்கரி கொள்வனவு மோசடியுடன் சம்பிக்கவுக்கு தொடர்பு இருப்பதாக, வசந்த சமரசிங்கவால் பிரபல சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியதாக கூறப்படும் செவ்வி தொடர்பிலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமரசிங்கவின் கூற்றினால், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக தனக்கு 100 கோடி ரூபா நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும் எனவும் சம்பிக்க குறித்த மனுவில் நீதிமன்றத்தைக் கேட்டுள்ளார்.