(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியில் உறுப்புரிமை நீக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் சில உறுப்பினர்களும் ராஜபக்ஷர்களுக்கு ஆதரவு வழங்க உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபலங்கள் ஐந்து பேர் கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.