பிரபல றகர் வீரர் வசீம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளார்.
இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மேலும் ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரியை கைது செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரண்டு அதிகாரிகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடன் குற்ற விசாரணை திணைக்களம் கலந்துரையாடி வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கலந்துரையாடலின் தீர்மானத்திற்கமைய சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கிடைத்தவுடன் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாஜுடீன் கொலை தொடர்பில் ஜனாதிபதி செயலக தொலைபேசி அழைப்பு தொடர்பில் நீண்ட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசாரணையின் மூலம் கொலையின் ஆரம்ப தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.