வடகொரியா பயங்கரவாதத்தை ஆதரித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சமீப காலமாக வடகொரியா பல தடவைகள் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் மாத்திரம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அந்த நாடு பரிசோதனை செய்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவை குறிவைத்து நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வட கொரியாவின் மீது ஐ.நா.சபை புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது.
இது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் மீது விதிக்கப்பட்ட புதிய பொருளாதார தடைக்கு அமெரிக்கா உரிய விலையை கொடுக்க நேரிடும் என வடகொரியா எச்சரித்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், வடகொரியா பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருகிறது என கடுமையாக குற்றம் சாட்டி பேசியுள்ளார்.
வடகொரியா தொடர்ந்து அணு சோதனை நடத்தி வருகிறது. அத்துடன் அந்த நாடு பயங்கரவாதத்தையும் ஆதரிக்கிறது எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளான ஈரான், சிரியா, சூடான் ஆகிய நாடுகளுடன் கூட்டு சேர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டம் தீட்டி வருகிறது என தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.