வடக்கில் இன்று ஹர்த்தால்…

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து இன்று(13) வடக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறும் குறித்த போராட்டத்திற்கு 19 அரசியல் கட்சிகளும் 50 பல்வேறு சிவில் அமைப்புக்களும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் மருந்தகங்கள் தவிர்ந்த பெரும்பாலான வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு, அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வட மாகாணத்தில் முன்னெடுத்து வரும் ஹர்த்தால் காரணமாக அந்த பகுதி முற்றாக செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.