வடக்கில் இளைஞர் ஒருவர் கடந்த ஞாயிறு(09) காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியான சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு பகுதியில் வைத்து காவல்துறையினர் நிறுத்தாமல் சென்ற மணல் லொறி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்த போது 24 வயதான யோசராசா தினேஸ் என்ற இளைஞர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியானார். இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக மனித உரிமை ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.