வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் குறைவு..

இலங்கைக்கு தென் மேற்காக காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கையை விட்டு விலகிச் சென்று கொண்டுள்ளதால், நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமை நாளையில்(10) இருந்து குறைவடையும் என வானிலை அவதான நிலையம் இன்று(09) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதோடு, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.