வடக்கு – கிழக்கு காணிகளை டிசம்பர் 31க்கு முன்னர் விடுவிக்குமாறு பணிப்பு…

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மக்களுக்கு சட்ட ரீதியாக உரிமையுள்ள காணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

குறித்த மாகாணங்களின் அபிவிருத்திக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயற்குழுவின் கூட்டம் நேற்று(03) மூன்றாவது முறையாக இடம்பெற்ற போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.