வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி செயற்பாட்டிற்காக புதிய திட்டம்

(FASTNEWS |COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு கிழக்கு அபிவிருத்தியை மையமாக கொண்ட ‘பனை நிதியம்’ என்ற திட்டம் இன்று(27) அலரிமாளிகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி செயற்பாட்டிற்காக குறித்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அங்கு உள்ள வீதிகள், பாலங்கள் மற்றும் வடிகால் அமைப்புகளை மேம்படுத்த அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 5 பில்லியன் ரூபாய் ஒதுக்க தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் மேலதிகமாக வேளாண்மை மற்றும் கைத்தொழில்துறை துறைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்க குறித்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.