வட மாகாண தொண்டராசிரியர்கள் கொழும்பிலுள்ள கல்வி அமைச்சு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் முன்பாகவும் இன்று(15) முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
182 தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்க மத்திய அரசாங்கம் அனுமதித்துள்ள நிலையில், வட மாகாண முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தால் அது தடைப்பட்டுள்ளதாக தெரிவித்தே வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான தொண்டராசிரியர்கள் குறித்த இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
#rishma..