வடமாகாணத்தில் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை..

உயர் அழுத்த, தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இன்று(07) காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வடமாகாணத்தில் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கிளிநொச்சி, வவுனியா மன்னார் போன்ற பிரதேசங்களில் பல்வேறு இடங்களில் மின் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.