அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள், மீண்டும் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு வடக்கில் உள்ள பல்வேறு அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கடிதங்களை அனுப்பியுள்ளதாக தெரிகின்றது.
தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமிக்க ஒருவராக திகழ்ந்து வரும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உலகளாவிய முஸ்லிம் அரசியல் தலைவர்களில் ஒருவராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைப்பது தொடர்பிலான அமைச்சரவை குழுவில் உறுப்பினராகவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேலும், கடந்த காலத்திலும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக இருந்து மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பணியாற்றிய அமைச்சர் றிசாத் பதியுதீனின் எதிர்கால பணிகள் சிறப்புற வாழ்த்துவதாகவும் அவ் அமைப்புக்களின் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.