வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா தனது இராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் கையளித்துள்ளார்.
இன்று(20) மாலை முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து தனது இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருந்த வடமாகாண கல்வி அமைச்சரை தாமாக முன்வந்து பதவி விலகுமாறு முதலமைச்சர் அண்மையில் கோரியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
