வடமாகாண முதலமைச்சர் மற்றும் மலேஷிய பிரதமர் சந்திப்பு…

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மலேஷிய பிரதமர் நஜீப் ரஸாக் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று(19) இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் வடமாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் தமிழ் மக்களின் வாழ்வாதார எழுச்சி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேஷிய பிரதமரை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றை தருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது