வடமேல் பருவமழை அதிகரிக்கும் அவதானம்..

எதிர்வரும் தினங்களில் வடமேற்கு பருவமழை அதிகரிக்கக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி , கிழக்கு , ஊவா , மத்திய , மேல் , சப்ரகமுவ மாகாணங்கள் போன்று காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேல் , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் பனிமூட்ட காலநிலை நிலவும் .

காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம் வரையான கடற்பிரதேசத்தின் காற்று மணிக்கு 70Km வேகத்தில் அதிகரிக்கது வீசக்கூடம் எனவும் , அதன் போது குறித்த கடற்பிரதேசங்கள் தற்காலிகமாக கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

#reeshma